நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

எங்களைப்பற்றி

தமிழ்ப் பதிப்புலகில் நாற்பது ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் நர்மதா பதிப்பகம் இதுவரை நான்காயிரம் தமிழ் நூல்களையும் ஆறு ஆங்கில நூல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட துறைகளில் பதிப்பித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களின் பரிசுகள் என நாற்பதிற்கும் அதிகமான விருதுகளைப் பெற்றிருக்கிறது.

பழம்பெரும் எழுத்தாளர்களான க.நா.சு, நகுலன், வல்லிக்கண்ணன், தி.க.சி., சாவி, நீலபத்மநாபன், கரிச்சான் குஞ்சு, அசோகமித்திரன், டொமினிக் ஜீவா, விக்கிரமன், கோவிமணிசேகரன், சா.கந்தசாமி, ரா.கி.ரங்கராஜன், புனிதன், முகம் மாமணி, பி.சி.கணேசன், சுஜாதா, விட்டல்ராவ், மு.மேத்தா, வாஸந்தி, மாலன், தமிழன்பன், சிலம்பொலி செல்லப்பன் போன்றோரின் நூல்களை வெளியிட்டுள்ளது.

இன்று புகழ்பெற்றிருக்கும் பல எழுத்தாளர்களின் முதல் படைப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது நர்மதா பதிப்பகம். திரு. பாலகுமாரன், ஜெயந்தன், அமுதபாரதி, சுப்ரமண்யராஜு, வண்ணநிலவன், திலகவதி, ரவி ஆறுமுகம், டாக்டர் ருத்ரன் ஆகியோரின் முதல் நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

31 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ நூல்களின் தமிழாக்கங்களை முதன் முதலில் தமிழ் வாசகர்களுக்குத் தந்திருக்கிறது.

தமிழ்ப் புத்தகத் தயாரிப்பில் பல நவீன முறைகளைக் கையாண்டு தமிழ் நூல்களின் தயாரிப்புத் தரம் உயர தனது பங்களிப்பை தந்து வருகிறது. நர்மதாவின் கிளை நிறுவனமான ‘ந்யு புக்லேண்ட்ஸ்’ 300க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்களின் நூல்களை தியாகராய நகரின் மையப் பகுதியில் விற்பனைக் காட்சிக்கூடத்தில் இடம்பெறச் செய்து, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அனுப்பி வருகிறது.

2013- ஆம் ஆண்டு டெல்லி குஷ்மாஞ்சலி பவுண்டேஷனின் இரண்டரை லட்சம் ரூபாய் பரிசு, திரு. விட்டல்ராவ் எழுதி நர்மதா வெளியிட்ட ``வாழ்வின் சில உன்னதங்கள்" நூலுக்குக் கிடைத்திருக்கிறது.
ABOUT US

Established in 1976, NARMADHA PATHIPAGAM has published four thousand Tamil books so far, under fifty disciplines. It has received Sahitya academy award, in addition to state government’s many awards and citations. The contributing writers include stalwarts like Ka.Na.Su., Nakulan, Vallikannan, Thi.Ka. Si., Saavi, Neela Padmanabhan, Karichan Gunju, Ashokamitran, Dominic Jeeva, Vikkiraman, Kovi.Manisekaran, Saa.Kandasamy, Ra.Ki.Rangarajan, Punithan, P.C.Ganesan, Sujatha, Vittal Rao, Mu.Metha, Vaasnthi, Maalan, Silamboli Chellapan and others.

To it’s notable credit, Narmadha has published the first works and introduced the today’s famous writers like Bala Kumaran, Jeyanthan, Vannanilavan, Thilakavathi IPS, Dr. Rudhran, Ravi Arumugam IPS, Amudha Bharathi and others. Narmadha has introduced philosophers like J.K., and Osho by way of translations to the Tamil readers.

The New Book Lands, a retail book showroom, is Narmadha’s venture to stock and sell nearly 300 Tamil publishers books, to the local readers as well to the foreign countries. This showroom houses all of the best Tamil literature under one roof.