நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம். தங்களது மேலான பார்வைக்காக எங்களது புதிய விலைப்பட்டியலை இந்த வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் கீழே இடது புறத்தில் ( நர்மதா பதிப்பகம் விலைப் பட்டியல் ) என்ற தலைப்புடன் இணைத்திருக்கிறோம் நீங்கள் பதிவு இறக்கம் செய்து புத்தக தலைப்புகளை தெரிந்துகொள்ளலாம்.

நல்ல இலக்கியத்தை நல்ல முறையில் பதிப்பித்து, வணிக நோக்கை மட்டும் கொள்ளாது, பயனுள்ள கருத்துக்கள் பரவிட எங்களால் இயலுகின்ற முயற்சிகளை செய்துவருகிறோம்.

இதுவரை நாங்கள் வெளியிட்ட நூல்களே இந்நோக்கத்திற்கு சான்று கூறுபவை. தங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் ஆதரவைப் பெரிதும் நாடுகிறோம். இப்பட்டியலில் கண்ட நூலின் விலையுடன் ரூ.20 சேர்த்து, எம்.ஓ. செய்து பதிவுத் தபாலில் நூல்களைப் பெறுங்கள். பதிவுத் தபால் கட்டணம் ரூ.20-ம், தேவையான கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.2/- சேர்த்தும் எம்.ஓ. செய்ய வேண்டுகிறோம்.தங்களது செல்லிடபேசி எண்ணை எங்களுக்கு குறுஞ்செய்தி (SMS) யாக அனுப்புங்கள். நாங்களே தொடர்புகொண்டு முழு விவரம் தெரிவிப்போம்.

எல்லா பெரிய ஊர்களின் புத்தகக் கடைகளிலும் நர்மதா நூல்கள் கிடைக்கின்றன. அவர்களிடமிருந்து தபால் செலவின்றி பெறலாம். எங்களிடமிருந்து வி.பி.பி.யிலும் பெறலாம். நூலின் விலையுடன் தபால் செலவும் சேரும். 100 ரூபாய் நூலுக்கு ரூ.28/- தபால் செலவு. இதைத்தவிர்க்க, உள்ளூர் கடையிலேயே பெறுவது சிக்கனமானது.

எம்,ஓ. அனுப்பும்போது கூப்பனில் தங்கள் முகவரியையும், செல்லிடபேசியின் எண்ணையும், தேவைப்படும் நூல்களின் விவரத்தையும் மறவாது எழுதுங்கள். சென்னையில் தி.நகர் தலைமை அஞ்சலகத்தை (பாண்டிபஜார்) ஒட்டிய நானா தெருவில் நர்மதா உள்ளது. அலுவலகம் காலை 9.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை. ஞாயிறு விடுமுறை.

முக்கிய குறிப்பு : பட்டியலில் உள்ள சில நூலின் விலைகள் மட்டுமே மாறுதலுக்குரியவை. எப்படி எனில், விலைப்பட்டியலில் உள்ள நூல் விலைகள் அந்தந்த நூலின் அந்த ஆண்டு பதிப்புக்குரியது.