நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்

இந்த நூல் அனைத்துக் கோணங்களிலும் மிகமிக உயர்ந்தது. ஆகம சாத்திரத்தில் மிகச்சிறந்த பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஆலயங்களின் விதிப்படி அர்ச்சனை செய்யப்பட வேண்டிய முறைகளை இதில் விளக்கியுள்ளார். இந்நூலாசிரியர் ஆகம பண்டிதர் மட்டுமல்லர்; அர்ச்சகரும் கூட. அர்ச்சகர் மாத்திரமல்லர்; சிறந்த பக்தர். இறைவனின் நித்திய கல்யாண குணங்களில் மூழ்கியவர். 

பக்தன் - என்ற வார்த்தையின் மூலப்பொருளில் (பஜ்) - அதாவது ஈடுபடுகின்ற என்ற பொருளுண்டு. "ஜங்கம் ஸ்ரீ விமானானி ஹ்ருதயானி மானீஷிண:" என்னும் வாக்கு இதுபோன்ற பக்தர்களைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. தமது இந்நூலின் வாயிலாக சாதகர்களுக்கு அவர் செய்துள்ள உதவி உண்மையில் மிகப்பெரியது. இதுவரை இதுபோன்ற முயற்சி நடைபெறவில்லை. இந்த முயற்சியின் பயனை நோக்கும்போது, இனி எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றொரு முயற்சி தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், மரம் கனிகளைத் தருகின்றது. பசித்தவருக்கு உணவளித்து உதவுகிறது. 

வெயிலில் துன்புறுவோர்களுக்கு நிழல் தந்து உதவுகிறது. 'ஸ்ரீ ஸவ்யஸாசி சுவாமிகள்' இதைப் போன்றவரே. நாம் ஆன்மிகப் பசி கொள்ளும்போதே, அவர் செய்துள்ள உதவியின் பலனை அறிய முடிகிறது. நாம் உலகியல் தாகம் கொண்டு செயல்பட்டாலும் அவரது முயற்சி பயனுடையதாகிறது. இந்நூலினால் பசி நீங்குகிறது. தாகவிடாயும் தீர்கிறது. இதனால் பசி நீங்கிச் சுபப்ட்டவர், அவருக்குச் செய்யும் பிரதி உபகாரம் அவரை வணங்குவது ஒன்றே.

book
pages 496
Author சி.வி.சிவராமகிருஷ்ண சர்மா
ISBN

ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1043
Book Name:   ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
pages:   496
Author:   சி.வி.சிவராமகிருஷ்ண சர்மா
ISBN:  
Weight:   1.108 grm
  • Rs. 500

Tags: AALAYA ARCHANAI - AAGAMANGALIN VAZHIYIL VIDHIMURAIGAL